வட இந்தியாவில் மாட்டு கோமியத்தை குடித்தால் நோய் குணமாகும் என்ற வதந்தி பரவியது. இந்நிலையில் சீனாவில் சிச்சுவானில் Yaan Bifengxia என்ற பூங்கா உள்ளது. இங்கு சைபீரிய புலி வகைகள் வளர்க்கப்படுகின்றது. இந்த புலியின் சிறுநீருடன் ஒயினை கலந்து குடித்தால் முடக்கு வாதம், தலைவலி, சுளுக்கு போன்ற நோய்கள் சரியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பூங்காவிற்குள் சிறுநீர் பாட்டில்கள் வைத்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வாமை ஏதும் ஏற்பட்டால் அதை நிறுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த புலியின் சிறுநீர் பாட்டில்கள் 250 கிராம் 50 யுவானுக்கு விற்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 600 ரூபாய் ஆகும். இதை பார்வையாளர் ஒருவர் தனது எக்ஸ் வலை பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் எதிர்வினை ஆற்றியுள்ளது. இதை வாங்கிய பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து சீனாவில் உள்ள பாரம்பரிய சீன மருத்துவர் ஒருவர் கூறியதாவது, ஆதாரம் இல்லாமல் அதன் மதிப்பை மிகைப்படுத்துவது சீன மருத்துவதை சிதைக்கிறது. அதோடு இது புலியின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. புலி சிறுநீர் ஒரு பாரம்பரிய மருதல்ல, இதன் வாயிலாக எந்த மருத்துவ பயன்களும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.