
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாவோன் பகுதியில் பள்ளி செல்லும் மாணவிகள் ஆபத்தான பயணத்தை எதிர்கொள்கின்றனர். முன்சியாறி அருகே பள்ளி மாணவிகள் ஆற்றை கடப்பதற்கு கயிறுகளை இழுத்து ட்ரோலி வண்டியில் ஆற்றைக் கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். இந்தியாவில் இன்னும் சில உட் கிராமங்களில் இது போன்று குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பல தடைகளை கடக்க வேண்டி உள்ளது.
இந்த ட்ரோலியில் ஒரே நேரத்தில் 5 நபர்கள் ஆற்றை கடக்க முடியும். இதனை ஒரு நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1.7 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை கடந்து உள்ளது.
View this post on Instagram