
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற – சட்டமன்ற பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.அ.இ.ச.ம.க-வின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு.N.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் கலந்து கொண்டார். இதில் பேசிய கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் அரசன் பொன்ராஜ்,
பணநாயகத்தை மறந்து நேர்மையான முறையிலே நாம் ஒரு தேர்தலை நாம் சந்தித்தோம் என்று சொன்னால், நிச்சயமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தான் முதலிலே ஆட்சியிலே அமரும் என்று இன்றைய நேரத்தில் நான் கூறிக் கொள்கின்றேன். திறமையான ஒரு தலைவர்… அப்படிப்பட்ட தலைவனை படைத்திருக்க கூடிய இந்த கட்சியை எல்லோரும் எழுச்சியோடு பார்க்கின்றார்கள். ஆனால் இன்று பணநாயகம் பேசுகிறது.
பணம் தான் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. பணம் தான் ஒரு கட்சியை உருவாக்குகிறது என்று சொன்னால், இன்னைக்கு ஆளக்கூடியவங்க கிட்ட எல்லாம் பாத்துட்டு இருக்கிறோம்…. நேற்று ஆண்டு ஆட்சிகள், அத்தனை அமைச்சர்களும்…. இன்றைய ஆட்சியிலே அமைச்சர்களாக இருக்கின்றார்கள். பார்த்தோம் என்று சொன்னால்…. மக்களுடைய பணத்தை கொள்ளை அடிப்பதற்காக…. கொள்ளையடித்து கட்சியிலே சேர்ப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றார்கள்….
ஒருவர் கொள்ளை அடித்து சேர்த்ததுனாலேயே EDயில் மாட்டிக் கொண்டார். ஓடி ஓடி கொள்ளையடித்ததால் EDயில் மாட்டி ஜெயிலில் இருந்து கொண்டிருக்கின்றார். ஆனாலும் என்ன கொடுமை என்று பார்த்தீர்கள் என்று சொன்னால் ? அவருக்கு இலாகா இல்லாத மந்திரியாக கொடுத்திருக்கின்றார்கள்…. இலாகா இல்லாத மந்திரியாக நம்முடைய பணத்தை, அவருக்கு சம்பளமாக கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எவ்வளவு கேவலமான ஒரு விஷயமாக பார்க்கின்றோம் என்று பார்த்தால்,
இன்றைய தினத்திலே திமுக ஆட்சியிலே பெண்களுக்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார்கள்…. வரவேற்கின்றோம்…. பெண்களுடைய மேம்பாட்டிற்காக…. அவர்களுடைய உரிமைத்தொகை என்று சொல்கிறார்கள்…. அந்த உரிமை தொகையை வாங்குவதற்கு…. பெண்களுக்கு முழு அதிகாரம் உண்டு….. ஆனாலும் நாம் என்ன சொல்கின்றோம் ? கொஞ்சம் பேருக்கு கொடுக்காதீங்க…. அத்தனை பேருக்கும் கொடுங்க…. நீங்க ஆயிரம் ரூபாய் அறிவித்த உடனே கர்நாடகா அரசு 2000 ரூபாய் என அறிவிச்சிட்டாங்க… போற போக்கை பார்த்தால் கன்னியாகுமாரி மாவட்டத்தை திமுக விற்றுவிடுமோ என்ற பயன் இருக்கின்றது என தெரிவித்தார்.