
தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் விவசாயத்தை நவீன மயம் ஆக்குவோம், விவசாயிகளுக்கு பயிர் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் அது வெறும் வாக்குறுதியாகவே இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் முதிய விவசாயி ஒருவர் தனது தோளில் கலைப்பையை கூட்டிக்கொண்டு தனது மனைவியுடன் விவசாய நிலத்தில் விழுவது போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் இந்த விவசாயி ஏன் இந்த காலத்திலும் மனிதக் கலைப்பையாக வேலை பார்க்கிறார். அவர் எப்போது நவீன காலத்துக்கு மாறுவார் என்று விமர்சித்தனர். ஆனால் கதையே வேற.
லத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கோவிந்த் பவார் (65) என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கோவிந்த் பவாருக்கு சொந்தமாக 2 1/2 ஏக்கம் வறண்ட நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தை உழுது பிழைப்புக்கு வழி தேட முயன்ற அவருக்கு டிராக்டர் எருதுகள் வாங்கவோ, வாடகைக்கு எடுக்கவோ பணம் இல்லை.
இதனால் அவர் இந்த முதிய வயதிலும் தளராமல் தனது மனைவியுடன் சேர்ந்து மனித கலப்பையாக மாறி உழவு பணியை தொடங்கி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்ய அதிகமாக பணம் தேவைப்படுகிறது. இதனால் நானும் எனது 60 வயது மனைவியும் மனித கலப்பையாக மாறிவிட்டோம்.
महाराष्ट्र: जब हल जोतने के लिए बैल नहीं मिले, तब खुद को ही बैल बना लिया…
लातूर ज़िले के हाडोलती गांव से एक दिल को झकझोर देने वाली तस्वीर सामने आई है। आर्थिक तंगी से जूझ रहे एक बुज़ुर्ग किसान दंपती को खेत की बुआई के लिए न तो बैल मिले, न मजदूर और न ही ट्रैक्टर का किराया चुकाने… pic.twitter.com/jpmKms3xY4
— AajTak (@aajtak) July 1, 2025
“>
கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக இவ்வாறு தான் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் இப்போது என்னால் முடியவில்லை. என் கைகள் நடுங்குகிறது எனது கால்களால் நிற்க முடியவில்லை. எனது தலை நிமிர முயற்சிக்கிறது உடலோ ஒத்துழைக்கவில்லை வாழ்க்கையும் எங்களுக்கு வேறு வழியை காட்டவில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.
மராட்டியத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், விவசாயி ஒருவர் நிலத்தில் மாடாக உழைக்கும் காட்சி வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.