தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் அவ்வப்போது சில இடங்களில் வெயில் கொளுத்த தான் செய்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக வெயில் இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 105 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக மதுரையில் வெயில் பதிவாகியுள்ளது. கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தக் கடுமையான வெப்பத்திற்கு மத்தியிலும் அவ்வப்போது மழை பெய்வது கொஞ்சம் வெயிலுக்கு இதமாக இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

அதோடு திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்துள்ளது. இதைத்தொடர்ந்து காலை நேரத்திலும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்திய நிலையில் தற்போது மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.