
பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரேந்திர குமார் ராம் இவர் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்துள்ளார். இந்த மனுவில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி கிசங்கஞ்ச் எக்சைஸ் காவல்துறையினர் மதுபானம் அருந்தியதாக கூறி கைது செய்திருந்தனர். இந்த சோதனையில் 41mg/100ml என்ற மதுபான அளவு காட்டப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் வயிறு கோளாறு சம்பந்தமான சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதனால் அவருக்கு ஆல்கஹால் கலந்த திரவ ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் வழக்கறிஞர் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு உயர் அதிகாரி சமர்ப்பித்த நிதி ரசிதை ராம் மறுத்ததால் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மூலம் பழிவாங்கும் நோக்கில் அவருக்கு எதிராக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதன்படி நீதிபதி பிபேக் சௌத்ரி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், மதுபான நுகர்வு உறுதிப்படுத்த ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மட்டுமே உறுதியான ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சொந்த மூச்சு சோதனையின் அடிப்படையில் மட்டும் ஒரு நபர் மதுபானம் அருந்தியுள்ளார் என்பது உறுதியான ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி தீர்ப்பளித்துள்ளார்.