
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டாலும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதே சமயத்தில் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கடுமையான வெயிலுக்கு மத்தியில் அவ்வப்போது மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.