
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஹரிஷ் கிருஷ்ணா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தெலுங்கானா மாநிலம் காஜில ராமத்தில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாதம் 1.10 லட்சம் ரூபாய் சம்பளம் ஆக வழங்கப்பட்டுள்ளது. இவர் சூதாட்டம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார். இதனால் இவருடைய நடவடிக்கை பிடிக்காததால் இவரது மனைவி விவாகரத்து செய்து விட்டார். இதனால் கடனை அடைக்க கொலையானாக மாற முடிவு செய்த இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரது வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்துள்ளார்.
இதன் மூலம் மணிகண்டன் வீட்டில் இல்லாத நேரத்தில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து அவரது வீட்டிற்கு சென்ற ஹரிஷ், மணிகண்டனின் மனைவியை மிரட்டி நகைகளை கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டனின் மனைவி நகைகளை கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து ஹரிஷ் நகையை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். உடனே பயந்து போன மணிகண்டனின் மனைவி வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொடுத்தார். அதன் பின் தப்பி ஓடிய ஹரிஷ் நகைகளை அடகு வைத்து பணமாக மாற்றினார். இது குறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஹரிஷ் கிருஷ்ணாவை கைது செய்தனர்.