
இஸ்ரேல்- ஈரான் போர் கடந்த ஆண்டு தொடங்கியது. இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களான நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான், தெஹ்ரான், தப்ரீஸ், ஹெர்மென்ஷா போன்ற கட்டுப்பாட்டு மையங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்கியது. அந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் ரைசிங் லைன் எனவும் பெயரிட்டு இருந்தது.
அந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் ஈரானின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த தளபதி உசேன் சலாமீ மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பல முக்கியமான தலைவர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஈரானின் வீர மரணம் அடைந்தவர்கள் விவரங்களுக்கான அறக்கட்டளை தலைவர் சைத் ஓஹாதி தெரிவித்ததாவது, இஸ்ரேலுடனான முதலில் இதுவரை 1160 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை 1100 ஆக அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இன்னும் சிலர் உயிருக்கு போராடிய நிலையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் வாஷிங்டன் அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு அளித்த தகவலில், ஈரானில் கிட்டத்தட்ட 436 பொதுமக்கள், 435 பாதுகாப்பு படையினர் என மொத்தம் 1190 பேர் உயிரிழந்ததாகவும், 4,475 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.