
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராவணன் குட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ். இவருக்கு அமரேஷ் (13) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் சிவகணேஷ், அமரேசை அழைத்துக் கொண்டு பைக்கில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பைக் மன்னார்குடி ருக்மணி குளம் சாலையில் சென்று கொண்டிருந்தது.
திடீரென எதிரே வந்த லாரி ஒன்று வேகமாக அந்த பைக் மீது மோதியதால் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அச்சம்பவத்தில் மாணவர் அமரேஷ் லாரியின் சக்கரத்தில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் தூக்கி எரியப்பட்ட சிவகணேஷ் பலத்த காயங்களுடன் உயிர்த்தப்பினார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவகணேசை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மேலும் உயிரிழந்த மாணவர் அமரேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.