
இன்றைய காலகட்டத்தில் ரயில்வே துறையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் மிகவும் முக்கியமான சமூகப் பிரச்சினையாக இருப்பது முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வதுதான். சிலர் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்கின்றனர்.
அதோடு அப்பெட்டிகளில் இருக்கும் பயணிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்கின்றனர். இது பற்றிய புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் கூடுதல் ரயில் பெட்டிகள் மற்றும் போதுமான டிக்கெட் பரிசோதகர்கள் இல்லாததால் தான் ஏற்படுகிறது என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் ஸ்லீப்பர் பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வதாக ஒரு நபர் இணையத்தில் பதிவிட்டிருந்தார். புகைப்படத்தோடு இருந்த அந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தனக்கு நடந்த அனுபவங்களையும் அதில் பகிர்ந்து கொண்டனர்.
இந்த பதிவு தற்போது ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே சேவா சமூக ஊடக கணக்கின் கவனத்திற்கு சென்ற நிலையில், இது தொடர்பாக ஒரு பதிவை ரயில்வே சேவா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் “இது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். உங்கள் விவரங்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். விரைவான தேர்வுக்காக 139 என்று எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்” என்று இருந்தது.