
சீனாவிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி வலியால் கதறிக்கொண்டிருக்கும் நிலையில், சீன மருத்துவர் ஒருவர் மிகவேகமாகவும், மிக மென்மையாகவும், கண் சிமிட்டும் நேரத்தில், அவளது இடப்பெயர்ந்த முழங்கை மூட்டை சரிசெய்கிறார்.
அந்த சிறுமி சிறிது நேரத்திற்கு முன்பு கை அசைக்க கூட முடியாத நிலையில் இருந்தாலும், சிகிச்சைக்குப் பிறகு சிரித்தபடி கையால் சாக்லேட்டை எடுத்துக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
மருத்துவ ரீதியில் அந்த நிலைமைக்கு “நர்ஸ்மெய்டின் எல்போ” (Nursemaid’s Elbow) என அழைக்கப்படுகிறது. இது சிறுவர்களுக்கு ஏற்படும் பொதுவான மூட்டு காயமாகும்.
இதில், கையை இழுத்ததில் எதிர்பாராதபடி எலும்பு சற்றே இடமாற்றம் அடைகிறது. மிக வேதனையுடன் இருக்கும் இந்த நிலையை ஒரு நிபுணரால் மிக எளிதாகச் சீராக்கலாம்.
அந்த வீடியோவில் காணப்படும் மருத்துவர் இதை நுட்பமான சிகிச்சையை மிக சீராகவும் விரைவாகவும் வழங்கி, சிறுமியின் வலியை உடனடியாக நீக்குகிறார்.
இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் “இது மாயாஜாலமா அல்லது மருத்துவமா?” என பரவசத்தில் பதிவு செய்து வருகின்றனர். “அந்த மருத்துவர் கடவுளின் மனித வடிவம் போல இருக்கிறார்” என நெட்டிசன்கள் பாராட்டிக்கொண்டுள்ளனர்.
மிக சின்ன செயலால் குழந்தையின் வலியைப் போக்கி, சிரிப்பை மீட்டுக்கொடுத்த மருத்துவரின் செயல் மருத்துவ உலகிலும், சமூகத்திலும் நல்ல உதாரணமாக வைக்கப்படுகிறது.