உத்தரபிரதேச மாநிலத்தில், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் காஸ்கஞ்ச் மற்றும் அம்ரோஹா மாவட்டங்களில் இரண்டு வேறுபட்ட இடங்களில் நடந்த சம்பவங்கள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.

அம்ரோஹா மாவட்டத்தில், விகாஸ் பவனில் மத்திய தொழிலாளர் நலக் குழுவில் பணிபுரிந்து வந்த நரேந்திரா என்ற ஊழியர் தனது அலுவலகத்தில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவர் வேலை பார்த்தபோது அருகில் இருந்த மற்றொரு ஊழியர் சிறிது நேரம் வெளியில் சென்றிருந்தார்.

திரும்பி வந்தபோது நரேந்திரா நாற்காலியில் மயங்கிய நிலையில் கிடந்ததை கவனித்தார். உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்த மரணக் காட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.