
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் படி சந்தோஷ்குமார் (20) என்பவரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது.
அங்கு 90 போதை மாத்திரைகள், ஊசிகள், 3 செல்போன்கள் இருந்தன. இவை அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆன்லைனில் அந்த மாத்திரைகளை ஆர்டர் செய்து அதனை மூதாட்டி இடம் கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.