
பாகிஸ்தான் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பரச்சினார் பகுதியில் ஒரு பள்ளியில் நடைபெற்ற தேர்வின் போது ஒரு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் ஒரு மாணவனின் விடைத்தாளை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் அந்த மாணவனின் விடைத்தாள் முற்றிலும் அழகான கையெழுத்தில், அழகு அலங்காரத்துடன் திருமண அட்டையைப் போல காணப்பட்டது.
அதனை பார்த்த ஆசிரியர் இது கணினி எழுத்தா? என்று ஒரு நிமிடம் வியந்து பார்த்தார். அந்த மாணவனையும் அவனது விடைத்தாளையும் வீடியோவாக எடுத்த ஆசிரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் மில்லியன் கணக்கான பார்வைகள் மற்றும் லைக்குகளை பெற்றுள்ளது.
View this post on Instagram
“இந்த கையெழுத்துக்காகவே முழு மதிப்பெண் கொடுக்கலாம்” என்றும், “இந்த மாணவனுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது”எனவும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும் அழகான கையெழுத்து என்பது கல்வியின் ஒருவித நாகரிகமாகவே பார்க்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.