
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள்… மதுக்கூரிலே இருக்கின்ற மலுமிச்சம்பட்டி எந்த இடத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒரு புதிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம். அந்த திட்டத்திற்கு பெயரை ”இதயம் காப்போம்”.
இதை பொருத்தவரை…. இதற்கு முன்னால் எல்லாம் மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் பெரிய மருத்துவமனைகளுக்கு … நகரப்புறங்களுக்குத்தான் வரவேண்டும். கிராமப்புறங்களில் இருப்பவர்கள்…. குக்கிராமங்களில் இருப்பவர்களுக்கு அதற்கேற்ற அந்த அறிகுறி ஏற்பட்டால் அவர்களுக்கு… நம்முடைய மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ”கூட்டு மருந்து” திட்டம்.
(லோடிங் டோஸ்) என்கின்ற 14 மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை இன்றைக்கு 8,713 துணை சுகாதார நிலையங்களிலும், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்… 10,999 மருத்துவமனைகளிலும் அந்த மருந்தை கையிருப்பு வைத்திருக்கிறோம். இப்போது நான் போகிற இடங்களில் எல்லாம் அந்த மருந்து இருக்கிறதா ? என்பதை நான் உறுதி செய்து வருகிறேன்.
எடப்பாடி பழனிச்சாமி நீங்களும் எங்கேயாவது போனால்… எதிர்க்கட்சித் தலைவர் பார்க்கக்கூடாது என்று இல்லை, ஏதாவது ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போய், சுப்பிரமணி சொல்லி இருப்பதை போல ”இதயம் காப்போம்” மருந்து இருக்கிறதா ? என்பதை பார்த்து கொள்ளுங்கள். தேவையானால் உங்கள் இதயத்தை காப்பதற்கு ஒரு 14 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.