ஸ்மிருதி இரானி தொலைக்காட்சி நடிகையும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நான்காண்டுகளாக ராகுல் காந்தி வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி, அமோகமாக வெற்றி பெற்று ராகுல் காந்தியை தோற்கடித்தார். அதன் பின்னர் மத்திய அமைச்சரவையின் அமைச்சராக செயல்பட்டார்.

2024 இல் அதே அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மாவிடம் தோற்றார். இந்நிலையில் தற்போது ஸ்மிருதி இரானி,”அனுபாமா” என்ற தொலைக்காட்சி தொடரின் நடிகையுடன் எடுத்த புகைப்படம் வெளியானது.ஸ்மிருதி இரானி மீண்டும் ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவுகிறது. இது குறித்து முன்னாள் மந்திரி எம்.பி ஸ்மிருதி இரானி கூறியதாவது, நான் எந்த தொலைக்காட்சி தொடரிலும் நடிக்கப் போவதில்லை என கூறினார்.