
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் மக்கள் பலராலும் ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகிறது. பாக்கியலட்சுமி கதைகளத்தில் கணவரால் கைவிடப்பட்டு தனது வாழ்க்கையில் துவண்டு போகாமல் துணிவுடன் எல்லாம் முடிவுகளையும் எடுக்கும் பெண்ணாக பாக்யா உள்ளார். இவருக்கு தொடர்ந்து தனது முதல் கணவர் மூலம் துன்பங்கள் வருகிறது. இதனை எதிர்த்துப் போராடி வருகிறார். இதுவே இந்த தொடரின் கதை உருவாகும். தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் ஜெனி மற்றும் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா மற்றும் விகாஸ் இருவரும் குறித்த வதந்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யாவும் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விகாஸ் இருவரும் உண்மையாகவே திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து திவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்ததாவது, சீரியலில் கணவன், மனைவியாக நடித்தால் நிஜ வாழ்விலும் அவர்கள் கணவன், மனைவியாக மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சீரியல் ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரங்களை ரசிப்பதால் நிஜ வாழ்விலும் அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் விகாஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் இதனால் என்னையும் விகாஸையும் சேர்த்து வைத்து பேசுவது இரு குடும்பத்தினருக்கும் இடையே பெரிய மனவருத்தத்தை ஏற்படுகிறது. இணையத்தில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்து இருந்தார்.