
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
पीछे देखो पीछे तो देखो
अब इनकी सारी कलाकारी निकलीं जाएगी pic.twitter.com/vNCR2SO9o0— Rupali Gautam (@Rupali_Gautam19) June 23, 2025
அதாவது அந்த வீடியோவில் வாலிபர்கள் 3 பேர் ஒரே பைக்கில் வேகமாக சாலையில் செல்கின்றனர். இதில் பைக்கை ஓட்டும் வாலிபர் சாலையில் நேராகச் செல்லாமல் வளைந்து வளைந்து சாகசம் காட்டிக் கொண்டே செல்கிறார். இதனை பார்த்த காவல்துறையினர் பின்னால் வேகமாக அந்த வாலிபர்களை துரத்தி வருகின்றனர்.
அப்போதும் அவர்கள் பின்னால் திரும்பி பார்க்காமல் மீண்டும் வளைந்து வளைந்து செல்கின்றனர். இதையடுத்து காவல்துறையினரின் வாகனம் முன்னாள் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.