
ஆன்லைன் மூலமாக ஐஆர்சிடிஆர் போர்ட்டலில் மற்றவர்களுக்கு ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பொழுது சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளது.
அதன்படி ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையி, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று தனிப்பட்ட பயணங்கள் ஐடி மூலமாக மின் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். ஆதார் இணைப்பை முடித்தவர்கள் ஒரு ஐடியோடு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.