இந்தியாவில் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 18 வது சீசன் மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக நடைபெற்றது. இதில் 577 வீரர்கள் பங்கேற்றனர். இதில் மொத்தம் 62 வெளிநாட்டவர்கள் உட்பட 182 வீரர்கள், ரூ. 639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அந்த அணியின் பயிற்சியாளரான ஆன்டி பிளவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, புதிய கேப்டன் குறித்த உரையாடல் விராட் கோலியுடன் நடைபெற்றது. அப்போது அவரிடம் நிறைய கருத்துக்களை கேட்டோம். அவரும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்தார். அதோடு அவருடைய முதிர்ச்சி அடைந்த கருத்துக்களையும் வெளிப்படுத்தினார். வருகிற சீசனுக்காக அவர் ஒரு வீரராக ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் விளையாட இருப்பது மிகப் பெரிய விஷயம்.

நாம் அவரைப் பற்றி நல்ல விஷயங்களை பேச வேண்டும். அவர் பதவியை விரும்பவில்லை. இந்த அணிக்காக முழு பங்களிப்பை வழங்க உள்ளார். அது மட்டுமின்றி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டனை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே நிச்சயமாக அவர் புதிய கேப்டனுக்கு உதவி செய்வார். மேலும் இயல்பாகவே அவர் ஒரு தலைவர். அதனால் அவருக்கு கேப்டன் பதவி பெரிய விஷயம் கிடையாது. அவர் நிச்சயமாக அணிக்காக விளையாட விரும்புகிறார் என்று கூறினார்.