
நடந்து முடிந்த 18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதையடுத்து பெங்களூரில் நேற்று ஆர் பி சி வெற்றி பேரணி நடைபெற்றது. இந்நிலையில் அந்த அணியின் 18 ஆண்டுகால ஏக்கம் இந்த ஐபிஎல் சீசனோடு தணிந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றியது.
இந்த சூழலில் அந்த அணியின் வணிக மதிப்பும் உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி ஆர் சி பி அணியின் வணிக மதிப்பு 227 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 269 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் இன் அதிக மதிப்புமிக்க அணியாக ஆர் பி சி உருவெடுத்துள்ளது கடந்த முறை முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே அணி 235 பில்லியன் அமெரிக்க டாலருடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 242 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 269 மில்லியன் டாலர்கள்
2. மும்பை இந்தியன்ஸ் – 242 மில்லியன் டாலர்கள்
3. சென்னை சூப்பர் கிங்ஸ் – 235 மில்லியன் டாலர்கள்
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 227 மில்லியன் டாலர்கள்
5.சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 154 மில்லியன் டாலர்கள்
6. டெல்லி கேப்பிடல்ஸ் – 152 மில்லியன் டாலர்கள்
7. ராஜஸ்தான் ராயல்ஸ் – 146 மில்லியன் டாலர்கள்
8. குஜராத் டைட்டன்ஸ் – 142 மில்லியன் டாலர்கள்
9. பஞ்சாப் கிங்ஸ் – 141 மில்லியன் டாலர்கள்
10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 122 மில்லியன் டாலர்கள்