IPL தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி அல்லது இரண்டு போட்டிகளை தோல்வியடைந்து சென்னை அணியுடனானபோட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தற்போது ரியான் பராக் செயல்பட்டு வருகிறார்.  2021 ஆம் வருடம் முதல் சஞ்சு சாம்சன்  தான் செய்யப்பட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது தான் சஞ்சு சாம்சன் விரலில் காயம் அடைந்ததால் அவர் விக்கெட் பணியில் ஈடுபட வேண்டாம் என்று பிசிசிஐ அறிவுறுத்தியது.

இதனை அடுத்து தற்போதைய IPL தொடரில் ராஜஸ்தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இருந்தார். விக்கெட் கீப்பிங் செய்யாமல் ஒரு இம்பேக்ட் ப்ளேயராக பேட்டிங் செய்ய மட்டும் அணியில் இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க பெங்களூர் சென்றுள்ளார். அங்கு  நடைபெற்ற சோதனையில் தேர்ச்சி அடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இனிவரும் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன்  செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.