
16–வது IPL கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தரம்சாலாவில் நேற்று நடந்த 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ல் அணிகள் மோதிக்கொண்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் பஞ்சாப் அணி முதலாவதாக களமிறங்கி தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னும், அதர்வா தாயீட்19 ரன்னிலும், ஷிகர் தவான் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 9 ரன்னிலும் அவுட் ஆகினர். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த சாம்கர்ரன், ஜிதேஷ் சர்மா 64 ரன்கள் அடித்தனர். சாம் கர்ரன் 49 ரன்னும், ஷாருக்கான் 41 ரன்னும் அடித்து ஆட்டம் இழக்காமல் விளையாடினர்.
கடைசியில் பஞ்சாப் அணியானது 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து குவித்தது. அதன்பின் 188 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்கோடு ராஜஸ்தான் களம் இறங்கியது. அப்போது அதிகபட்சமாபியா தேவ்தட் படிக்கல் 51 ரன்களும், யாஷவி ஜெய்ஸ்வால் 50 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மியர் 46 ரன்களும், ரியான் பராக் 20 ரன்களும், சஞ்சு சாம்சன் 2 ரன்களும் அடித்தனர். அதேபோல் துருவ் ஜூரல் 10 ரன்களும், டிரெண்ட் பவுல்ட் ஒரு ரன் எடுத்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணியானது 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் அடித்து பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றியடைந்தது.