
இந்த சீசனில் ஐபிஎல் இன் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடங்களை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் இறுதிக்கட்ட போட்டிகள் வருகின்றன மே 23 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கு சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானமும், குஜராத் மாநில அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குவாலிஃபையர் 1 மே 23ஆம் தேதி, எலிமினேட்டர் மே 24ஆம் தேதி போட்டிகள் சென்னையில் நடைபெறும். அதனைப் போலவே குவாலிஃபையர் 2 மே 26 ஆம் தேதியும் இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.