கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன் என கூறினார். அதன் பிறகு நடிகர் சுதீப்புக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. இந்த கடிதத்தில் நடிகர் சுதீப்பின் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவேன் என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து நடிகர் சுதீப் போலீசில் புகார் கொடுத்த நிலையில் தற்போது நடிகர் சுதீப்பின் நெருங்கிய நண்பரும், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சுதீப்பின் அறக்கட்டளை நிர்வாகியான ரமேஷ் கிட்டி என்பவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் சுதீப் மற்றும் ரமேஷ் கிட்டி ஆகியோருக்கு இடையே அறக்கட்டளை நிதியை கையாள்வதில் பிரச்சனை இருந்துள்ளது. அறக்கட்டளையில் தான் 2 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் ஆனால் சுதீப் தன்னை மோசடி செய்ததால் தான் மிரட்டல் கடிதம் அனுப்பினேன் எனவும் ரமேஷ் கிட்டி கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பலருக்கும் தொடர்பு இருக்கும் எனக் கூறப்படுவதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.