
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2025 இல் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். இந்தத் தொடரின் அடுத்த நான்காவது ஆண்டுக்கான போட்டியை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவில்லை எனில் இந்தப் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது என ஐசிசி க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இந்தப் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றினாலோ அல்லது இந்திய அணி அறிவுறுத்திய படி நடத்தினாலோ இந்த சாம்பியன் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி போட்டியிடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.