ஐசிசி யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறும் கிரிக்கெட் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக பி.சி.சி.ஏ பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழா கோவையில் நடத்தப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோவையில் கிருஷ்ணா கல்லூரி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது, எந்த ஒரு கல்வி நிலையமும் இதுபோன்று சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் வைத்திருப்பார்கள் என சொல்ல முடியாது. பஞ்சாப் மாநிலத்தில் வளர்ந்த அமைச்சர் மாநில கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 19 வயதிற்கு கீழான அணியில் இடம் பெற்று ரஞ்சிக்கோப்பையை வென்றதாகவும், ஹிமாச்சல் கிரிக்கெட் கேப்டனாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2002-ஆம் முதல் 2005-ஆம் ஆண்டு வரை ஐந்து புதிய விளையாட்டு அரங்கங்களை ஹிமாச்சல் பிரதேசத்தில் கொண்டு வந்தேன். அதில் தர்மசாலா அரங்கம் உலக தரத்தினை உடையது. அடுத்த மாதம் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதே தர்மசாலா மைதானத்தில் தான் உலகக்கோப்பை நடத்த உள்ளோம் என அமைச்சர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழா பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. கோவை மைதான விளையாட்டு அரங்கில் சில போட்டிகள் நடத்தப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.