
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சினோஹில்ஸ் என்ற பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இந்து கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு அமெரிக்காவில் வாழும் இந்து மக்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த நிலையில் கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள சுவர்களில் ஸ்பிரே மூலம் இந்துக்களுக்கு எதிரான வாசகங்களான”go back Hindu”போன்றவை எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து கோவில் நிர்வாகம் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்ததாவது,” கலிபோர்னியாவில் உள்ள இந்து கோவிலில் இந்து சமூகத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வெறுப்பை வெளிப்படுத்தும் சம்பவமாக உள்ளது. இதுபோன்ற செயலை இனி கலிபோர்னியாவில் வேரூன்ற விடமாட்டோம்.
நமது பொதுவான மனிதநேயம், நம்பிக்கை, அமைதி இரக்கம் எப்போதும் மேலோங்கி நிற்பதை உறுதி செய்வோம்”என தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து இந்து கோவில்கள் அவமதிப்பது குறித்து அமெரிக்க போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.