
ஏமன் நாட்டில் நிமிஷா பெரியார் என்பவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நிமிஷா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஏமனில் வசித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவருடைய கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவிற்கு வந்து விட்டனர். அந்த சமயத்தில் ஏமன் நாட்டில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் நிமிஷா பிரியாவால் இந்தியாவிற்கு வர முடியவில்லை.
இதை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நிமிஷா பிரியா, தலால் அப்தோ மஹ்தி என்று ஏமன் நாட்டை சேர்ந்தவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் நிமிஷா பிரியாவின் தாய் மகளை மீட்பதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டார்.
ஆனால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவர்கள் மன்னித்தால் மட்டுமே தண்டனையில் இருந்து விடுபட முடியும் என்பது ஏமன் நாட்டு விளக்கம். அதன்படி அவரை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. தற்போது வரும் 16ஆம் தேதி இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிமிஷா பிரியாவை தண்டனையில் இருந்து விடுவிப்பதற்கு பல சிக்கல்கள் உள்ளது. ஏமன் நாட்டில் ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் தான் தலைநகர் சனா உள்ளது. இப்பகுதியில் உள்ள சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஏமன் உள்ளிட்ட நகரங்களை கட்டுப்பாட்டில் வரைத்திருக்கும் அரசு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும், பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் அங்கீகரிக்கப்படாததால் நிமிஷா பிரியாவை விடுவிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.