
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்சில் நடைபெற உள்ளது. இதற்கு 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அணியை தேர்வு செய்த அறிவித்தது. இதில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Cake and celebrations for the Titans heading to England 🤩 pic.twitter.com/8wQIBfK8Fp
— Gujarat Titans (@gujarat_titans) May 24, 2025
ஐபிஎல் போட்டியில் கலக்கி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் வேதப்பந்து டெஸ்ட் அணிக்கு முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ள குஜராத் அணி வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் இதோ..
சுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பண்ட்(துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.