
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து அனுப்பிய ஏவுகணையை இந்திய ராணுவம் வீழ்த்தியது.
அதன்பின் பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து நேற்று இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.
ஆனால் போர் நிறுத்தம் அறிவித்ததை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இது தொடர்பாக இந்தியா தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைபெற்ற பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய முன்னாள் வீரர் சேவாக் இணையதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் “அதன் வாலை நிமிர்த்த முடியாது… அது என்ன செய்தாலும் வளைந்தே இருக்கும்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் “என்ன செய்தாலும் நாயின் வாலை நிமிர்த்த முடியாது…. அது அப்படியே தான் இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.