ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான் பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த தாக்குதலில் நேற்று இரவு இந்தியாவின் முக்கிய நகரங்கள், மக்கள் வசிக்கும் கட்டமைப்புகள், வழிபாட்டுத் தலங்கள், ராணுவ அமைப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் சுமார் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதனை இந்திய ராணுவம் முழுவதுமாக முறியடித்துள்ளது.

மேலும் இந்திய வான்வெளி தாக்குதலை தடுப்பதற்காக பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்துவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா எல்லை மாநிலங்களில் உள்ள மிக முக்கியமான 24 விமான நிலையங்களை மூடியுள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், முதலில் மே 10ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள், தொடர் போர் பதற்றம் காரணமாக வரும் மே 14ஆம் தேதி வரை மூடப்படும் என தெரிவித்துள்ளது.

அதாவது எல்லை மாநிலங்களான சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, சிம்லா, ஜெய்கல்மேர்,பதன்கோனட், ஜம்மு, பிஹானர், லே, போர்பந்தர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படும் என தெரிவித்துள்ளது.