
திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், ஓட்டு அரசியலுக்காக அண்ணன், தம்பியாக… மாமன், மச்சானாக… பங்கும் – பங்காளியாக… உறவு கூடி கைகொடுத்து, மகிழ்ந்து… தோளோடு தோல் கொடுத்து அன்பு பாராட்டுகிற…. எனது உறவிடத்தில் இன்று வெறுப்பை விதைக்கின்ற ஒரு கேடுகெட்ட கீழ்த்தனமான, அநாகரிகமான, ஓட்டு அரசியல் எதற்காக ? இந்த வாழ்வு என்பது எப்போதும் நிலையானதா? நீங்கள் எண்ணி பார்க்க மாட்டீர்களா? மனிதத்தை நீங்கள் எதற்காக கொலை செய்கிறீர்கள் .
அப்பாவி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது… இஸ்லாமியர்களை கொலை செய்வது…. அப்பாவி இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் பள்ளிவாசல்களை, மசூதிகளை இடித்து தரை மட்டம் ஆக்க வேண்டும் என்று பேசுவது…. பாங்கு ஓத அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது… இந்த மண்ணின் விடுதலைக்காக….. உன்னை விட…. உன் பாட்டனை விட…. உன் முப்பாட்டனை விட…. ஆயிரம் மடங்கு படை கட்டி ஆட்சி செய்த எம் இனத்தின் வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள்…..
இந்திய இஸ்லாமிய குடும்பத்தில் தோன்றிய ஒவ்வொரு தலைவனுக்குமான வரலாறு இருக்கிறது… இந்த வரலாற்றை புரிந்து கொள்ளாமல், இந்த வரலாற்றை அறிந்து கொள்ளாமல்…. பாகிஸ்தானுக்கு போ என்று சொல்கிறாய்.. ஏண்டா… ஒட்டுமொத்த இந்தியாவே எங்களுடையது.. கைபர் – போலான் கணவாய் வழியாக…. ஆடு, மாடுகளை மேய்க்க வைத்த கூட்டம், என் மண்ணின் மக்களை பார்த்து பாகிஸ்தானுக்கு போ என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது? உனக்கு என்ன யோகிதம் இருக்கிறது? என பேசினார்.