2024 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி வருகின்றனர். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் ஒரு புதிய சாதனையை படைத்து இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இந்திய அணி 2024 ஆம் ஆண்டில் 102 சிக்ஸர்களை அடித்து ஒரு வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளனர். இதுவரை எந்த அணியும் ஒரே ஆண்டில் 100 சிக்ஸர்களை அடிக்கவில்லை.இந்த சாதனை முன்னர் இங்கிலாந்து அணியால் பிடிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 89 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தனர்.

அதற்கு முன்பு, 2021 ஆம் ஆண்டு இந்திய அணி 87 சிக்ஸர்களை அடித்திருந்தனர். 2023 மற்றும் 2024 ஆண்டுகளில், இந்திய அணியின் சக்தி மிகுந்த ஆட்டம் இந்த சாதனையை முறியடித்து, டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடிக்கும் அணியாக மாறியுள்ளது.நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடாதபோதும், இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி, ரோஹித் சர்மா, மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி இன்னும் 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.இந்த இமாலய சாதனை மூலம் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் சிக்ஸர்களை அடிப்பதில் புதிய இலக்குகளை எட்டி வருகிறது. இதனால் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை மற்ற அணிகள் உற்றுப் பார்த்து வருகின்றனர்.தொடர்ந்துப் போற்றப்படும் இந்த சாதனை, இந்திய அணியின் உறுதியான நிலைப்பாட்டையும், அவர்களின் சுழல் பந்துவீச்சையும் வெளிப்படுத்துகிறது.