தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் பல் பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த அமுதா ஐஏஎஸ் அவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ஊரக வளர்ச்சி துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் தற்போது உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை என்றாலே சட்டம் ஒழுங்கு விஷயம் தான். இதன் கட்டுப்பாட்டின் கீழ் தான் காவல்துறையும் செயல்படுகிறது.

எனவே உள்துறையின் மிக முக்கிய பங்கு தமிழ்நாட்டில் க்ரைம் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதும், குற்ற செயல்களுக்கு விரைவாக தீர்வு கண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதும் தான். தமிழகத்தில் சமீப காலமாகவே பல்வேறு விதமான கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் அவர்கள் பொறுப்பேற்றுள்ளதால் அவருக்கு கண்டிப்பாக சவாலான பணிகள் அமையும் என்பதில் ஐயமில்லை. மேலும் இவற்றையெல்லாம் அமுதா ஐஏஎஸ் அவர்கள் எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.