
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு நாளை முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்குவங்க கடலோரப் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், மத்தியமேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் மத்திய பகுதிகளில் இன்று முதல் 14ஆம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.