
நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் குறைவாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியிருந்ததாவது, வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்த்தின் கட்டணத்தை இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் தான் மிகவும் குறைவாக உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தப்பட்டால் மின்சாரத்துக்கு சராசரியாக 113 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் மும்பையில் 100 யூனிட்டுக்கு 643ரூபாய், ராஜஸ்தானில் ரூபாய் 883, மராத்திய மாநிலத்தில் 668 ரூபாயும், உத்தரபிரதேசத்தில் 693 ரூபாயும், பீகாரில் 684 ரூபாயும், மேற்கு வங்க மாநிலத்தில் 654 ரூபாயும், கர்நாடக மாநிலத்தில் 631ரூபாய், மத்திய பிரதேசத்தில் 643யும், ஒரிசா மாநிலத்தில் 426ரூபாயும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 431 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதை பார்க்கும் போது இந்திய மாநிலங்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தை விட தமிழ்நாட்டில் தான் மிகவும் குறைவாக வசூலிக்கப்படுகிறது. இதை தமிழ்நாடு அரசோ, திராவிட முன்னேற்ற கழகமோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை, இதனை அரவிந்த் வாரியர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் முதலமைச்சர் ஏழை, எளியோரின் நல வாழ்வில் செலுத்தி வரும் அக்கறையையும் கரிசனமும் வெளிப்படையாக தெரிகிறது என்ற அவர் தெரிவித்துள்ளார்.