செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி,  டெல்லியில் என்ன நடக்குது என்ற கேள்விக்கு,  குதிரை நடக்குது, யானை நடக்குது. மாநிலத் தலைவர் அண்ணாமலை அமித்ஷா சந்திப்பில் நல்ல முடிவு கிடைக்கும். நீங்க சந்தோஷப்படுற மாதிரி முடிவு கிடைக்கும். அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும்.  கூட்டணி நீடிக்கனும்னு தானே பெரியவங்க எல்லாம் பேசுறாங்க. எல்லாம் நல்லபடியா முடியும் என தெரிவித்தார்.