
கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரகசிய சோதனையில் கேரளா தொலைக்காட்சி தொடரின் நடிகையின் வீட்டில் அரசால் தடை விதிக்கப்பட்ட போதைப் பொருள்கள் கிடைத்ததாக காவல்துறையினர் தரப்பில் செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னரே கிடைத்த ரகசியமான தகவலின் படி ஒழிவுபாறையில் உள்ள நடிகையின் வீட்டில் சோதனை நடத்தியதில் மெத்திலினெடியோக்சிபெனெதிலமைன் (எம்டிஎம்ஏ) என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, ரகசிய முறையில் சோதனை நடத்தி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியாக ஒழிவுபாறையை அடுத்துள்ள ஹேம்நாத் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து போதைப்பொருள் மற்றும் மனநோய் மருந்துகள் தடுப்பு பொருள் சட்டத்தின் கீழ் தொலைக்காட்சி நடிகையை கைது செய்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்த விவரங்களை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.