செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தர்மத்தின் வழி நின்று பேசினீங்கன்னா, நீங்க யாரு பின்னாடி நிக்கணும். இந்திரா காந்தி இருக்கிற வர பாலஸ்தீன விடுதலைய ஆதரிச்சு, பாலஸ்தீனதின் பக்கம். ஈழத்தின் விடுதலைய ஆதரிச்சு, ஈழத்தின் பக்கம். “ஒரு வல்லாதிக்கத்தின் அழகே எளியோன் பக்கம் நிற்கிறது தான்”.

வலியோனுடைய அழகு சின்னவன் பக்கத்துல நிற்கிறது தான். எவன் வந்து அழித்து ஒழிக்கிறானோ, அவனுக்கு ஆதரவா நிற்கிறதல்ல, வலிமை மிக்கவனுக்கு அழகு. அதான் இந்தியா செய்யுது. அதனுடைய வெளியுறவு கொள்கை தவறா இருக்கு. அதை ஒன்னும் பண்ண முடியாது.

இதெல்லாம் சர்ச்சை இல்ல, நான் பேசுனது, வரலாறு. நீங்க வரலாற்று பூர்வமா தான் எதிர்த்து என்னைய தர்க்கம் செய்யணும்மே ஒழிய, சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்க கூடாது. நான் வரலாற்றை படிக்கிறேன். வரலாற்றை பேசுறேன். உணவு, உடை,  வழிபாடு அதெல்லாம் அவன் அவன் விருப்பம்.

நான் நாயை தின்பேன், பேயை தின்பேன் உங்களுக்கு என்ன பிரச்சனை ? நாகலாந்து  மக்கள் தான் நாய் திங்குறாங்களா ? சீனால சாப்பிடலையா ?  மத்த நாடுகள் எல்லாம் சாப்பிடலையா ? உணவு என்பது என் உரிமை.நான் என்ன சொல்ற… நீ இந்த நாட்டுல மாட்டுக்கறி திங்காத… அந்த கறி திங்காத…. பன்னிக்கறி திங்காத.. எதையும் சொல்லு. முதல்ல என் உணவை  உறுதி செய்ய. அப்புறம் இதை திங்காதன்னு சொல்லு. உணவை உறுதி செய்ய முடியுமா ? உன்னால முடியல.  அப்புறம் நான் என்ன சாப்பிட்டா உனக்கு என்ன ?  என பேசினார்.