
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாதில் இந்திய தொழில் நுட்பக் கழகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஏராளமானவர்கள் படித்து வருகிறார்கள். இந்த வகையில் பிம்லேஸ் குமார் என்பவரும் படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி விடுதியில் உள்ள அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிம்லேசின் உடலை மீட்டு உடல்கூறு மறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிம்லேஷ் இறப்பு கொலையா?, தற்கொலையா?, அல்லது வேறு ஏதும் காரணமா ? என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஐஐடி விடுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.