ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலமான பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்திய அரசாங்கம் எல்லைப் பகுதியில் ராணுவ படைகளை குவித்து பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு மந்திரி, முப்படைகளின் தலைமை தளபதி, மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, பிரதமரிடம் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து இருக்கிறோம் என்றும் என்ன செய்ய வேண்டுமோ அதனை பிரதமர் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி பேசிய போது பிரதமர் மோடி நம்மிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன, தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால் அவற்றை நாம் பயன்படுத்துவோம் என்றும் கூறினார்.

இதுவரை இந்தியா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது. அப்படியே தாக்குதல் நடத்தினாலும் நாம் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம். ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாக அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறினார்.