
செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, NCW பத்தி நீங்க சொல்றீங்க. நான் 36 வருஷம் தமிழ்நாட்டில் இருக்கேன். இதுக்கு முன்னாடி யாருமே NCW பத்தி பேசினது, நான் கேள்விப்பட்டதே கிடையாது. அது என்ன ஏப்ரல் மாதத்துக்கு அப்புறம்…. குஷ்பூ எப்போ உறுப்பினரானாக ஆனார்களோ, அப்ப பேச ஆரம்பிச்சுட்டு இருக்கீங்க….
நான் உங்ககிட்ட கேட்கிறேன்…. NCW பல ஆண்டுகளாக இருக்கிறது. எப்ப NCW பார்ம் பண்ணது கொஞ்சம் சொல்லுங்க ? எப்ப NCW கமிஷன் ஃபார்ம் பண்ணாங்க , அது தெரியுமா ? நான் வந்தது பிறகு தான் நீங்க NCW பத்தி பேசுறீங்க. குஷ்பூ வந்தா… நீங்க அதுக்கு ஏதாவது ஒரு குரல் கொடுக்கணும்னு இருக்கு…. சரிப்பா பேசுங்க….
எனக்கு ஒரு விதத்தில் சந்தோசம், குஷ்பு எதை பேசினாலும் இன்னும் அது சர்ச்சைக்குரிய விஷயம், எல்லாரும் ஆக்குறிங்க. குஷ்பு மேல தொங்கிட்டு போனால் நமக்கு நாலு பேர் பேட்டி எடுப்பாங்கன்னு….. அந்த பிரபலத்தை அவர்களுக்கு வாங்கி கொடுக்குறேன். 36 வருஷம் கழிச்சு அந்த இடத்துல இருக்கேன் பாருங்க…. அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் என தெரிவித்தார்.