
ஜம்மு- காஷ்மீரில் அனந்தராஜ் பகுதியில் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
அந்தத் தாக்குதலில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இது மிகவும் மோசமான ஒன்று. என் நிலைப்பாடு என்னவென்றால் நான் இருவருடனும் ஒத்துப் போகிறேன்.
எனக்கு இருவருடனும் நல்ல உறவு உள்ளது. இருவரையும் நன்றாக தெரியும். அவர்களே அதை சரி செய்வார்கள். அவர்களே இதை நிறுத்துவதை பார்க்க விரும்புகிறேன். இனி அவர்கள் அதை நிறுத்துவார்கள் என நம்புகிறேன்.
அவர்கள் தற்போது மிகவும் மோசமாகி விட்டார்கள். அவர்களாகவே அதை நிறுத்துவார்கள் என நம்புகிறேன். நாங்கள் இரு நாடுகளுடனும் நன்றாக பழகுகிறோம். ஏதாவது உதவி செய்ய முடிந்தால், நிச்சயம் நான் அங்கே இருப்பேன் என தெரிவித்தார்.