கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே யாத்கீர் மாவட்டத்தில் பாப்பரகா என்ற கிராமம் இந்த கிராமத்தில் 50 தலித் குடும்பங்களை ஊரைவிட்டு உயர்ந்த ஜாதியினர் ஒதுக்கி வைத்துள்ளனர்.‌ அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க உயர் சாதி வாலிபர் 15 வயது தலித் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக ஆன நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை வாபஸ் பெரும்படி தலித் குடும்பத்தினருக்கு உயர் ஜாதியினர் அழுத்தம் கொடுத்தனர்.

அவர்கள் புகாரை திரும்ப பெற மறுத்ததால் ஊரை விட்டு 50 தலித் குடும்பத்தினரை மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டனர். அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மற்றும் கோவில்களில் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர் தொடர்ந்து தலித் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததை வாபஸ் பெறும்படி வலியுறுத்தி வருகிறார். ஆனால் உயர் ஜாதியினர் கேட்ட பாடில்லை. மேலும் நாகரிகம் வளர்ந்து வரும் காலத்திலும் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பாகுபாட்டால் தலித் சமூகத்தினருக்கு அரங்கேறிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது