சர்வதேச கிரிக்கெட் வாரியம் டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் ஐந்து விக்கெட் எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளார்.

அதேபோன்று நேற்று போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆதில் ரஷித் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த அகில் ஹுசைன் இரண்டாவது இடத்தையும் இலங்கையை சேர்ந்த ஹசாரங்கா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.