முன்னதாக பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, அது அவருடைய கருத்து, அவருடைய கொள்கை. அதைப்பற்றி விமர்சிக்க நான் யார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை, முரண்பாடு, கருத்து இருக்கும் என்று தெரிவித்தார். அதேபோன்று முருகனுக்கு வன்னியர் சங்கத்தில் பதவி கிடையாது என்று நான் உறுதி செய்கிறேன். எல்லோருக்கும் பதவி கொடுப்பது போல அவருக்கும் கொடுப்போம் என்று தெரிவித்தார்.