
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என்னை பொறுத்தவரை அண்ணாமலைக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பிரச்சனை இருக்கா ? இல்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பிரச்சனை இருக்கா ? இல்லை. எந்த பிரச்சினையும் இல்லை. இதுல தெளிவாக இருக்கோம்… ஓப்பனா இருக்கோம்.
அதே போல கிட்டத்தட்ட நான்கு நாட்களாக நிறைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர்கள் பேசியிருக்காங்க. அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் பேசியிருக்காங்க. ஆர்.பி. உதயகுமார் அவங்க பேசியிருக்காங்க. செல்லூர் ராஜு அவங்க கூட மதுரையில பேசி இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். எல்லாரும் பேசியிருக்காங்க. இதுல ஒரு விஷயத்தை நாம புரிஞ்சுக்கணும்.
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. அதிமுகவில் இருக்கக்கூடிய சில தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கா ? இருக்கலாம். அது எனக்கு தெரியாது. ஏனென்றால் அவங்களுடைய பேச்சை வச்சு சொல்றேன். எனக்கு யார்கிட்டயும் பிரச்சனை இல்லை. நாங்கள் அனைவருமே…. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை நாங்கள் மோடி அவர்களுடைய கட்சி.
எங்களுடைய தலைவர் மோடி. மோடி அவர்களை முன்னிலைப்படுத்தி, மூன்றாவது முறை தேர்தலுக்கு போறோம். இந்தக் கூட்டணியினுடைய மைய புள்ளி நரேந்திர மோடி அவர்கள். நரேந்திர மோடி அவர்களை யாரெல்லாம் பிரதம மந்திரி வேட்பாளராக ஏற்றுக்கொள்கின்றார்களோ, அவங்க இந்த கூட்டணியில் இருக்காங்க. NDAவே நம்முடைய பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள். இதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஏத்துக்கிறார்களா ? ஏத்துக்கிறாங்க…. நான் எந்த பிரச்சனையும் பாக்கல என தெரிவித்தார்.