
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன்.
அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத் தேடித் தர மதிமுக தொடர்ந்து பாடுபடும். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” என திட்டவட்டமாக கூறினார்.